கட்டாய திருமணத்தை தடுத்து சாதித்தார் 16 வயது சிறுமி



ஆல்பம்


திருச்சி : குடும்ப பொருளாதார சூழல், பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக பால்ய திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த திருச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, படிப்பு மேல் ஏற்பட்ட காதலால், "ஹெல்ப் லைன்-1098' எண்ணுக்கு போன் செய்து, கட்டாயத் திருமணத்திலிருந்து தன்னை தற் காத்துக் கொண்டு மற்ற சிறுமிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.


திருச்சி, உறையூர், காவிரிநகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பாஸ்கர் (42); இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு மணிமொழி(16) சக்திவேல் (15) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நிர்மலா சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். சரஸ்வதி (31) என்பவரை, பாஸ்கர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு லோகேஸ்வரி (6) என்ற மகள் உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடித்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மணிமொழிக்கு, திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்து, வரன் பார்த்தனர். குளித்தலை, வையாபுரி நகரைச் சேர்ந்த மாதையன் - சரசு மகன் சிவகுமார் என்பவருக்கு நிச்சயம் செய்தனர். மணிமொழிக்கு திருமணத்தில் இஷ்டமில்லை. குடும்ப பொருளாதார சூழல் மற்றும் பெற்றோர் வற் புறுத்தல் காரணமாக, திருமணத் துக்கு சம்மதித்தார். வரும் 7ம் தேதி, குளித்தலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், தேவாங்கர் சமுதாய கூடத்தில் திருமணம் நடக்க இருந்தது.


எஸ்.எஸ்.எல்.சி., முடிவு வெளியானதில், மணிமொழி, 417 மதிப் பெண் பெற்றிருந்தார். மதிப்பெண்ணை பார்த்ததும் எப்படியாவது உயர் படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணிய மணிமொழி, திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். மணிமொழி படித்த உறையூர் எஸ்.எம்., மேல்நிலைப் பள்ளியில், மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்புக்காக துவங்கப்பட்ட, "ஹெல்ப் லைன் எண்-1098' பற்றி, அக் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பெண் குழந்தை பாதுகாப்புச் சட்டம், பாலியல் திருமணம் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மீறி யாராவது பால்ய திருமணத் துக்குக் கட்டாயப்படுத்தினால், 1098க்கு போன் செய்யலாம் என்றும் கூறினர். சமயோசிதமாக சிந்தித்த மணிமொழி, குழந்தைகள், "ஹெல்ப் லைன் எண்-1098' எண்ணுக்கு போன் செய்து, "18 வயது பூர்த்தியடையாத எனக்கு, கட்டாயத் திருமணம் செய்து வைக்க, என் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு திருமணத் தில் இஷ்டமில்லை' எனக் கூறினார். இதையடுத்து, "ஹெல்ப் லைன்' திருச்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆல்பர்ட், மாவட்ட சமூகநல அலுவலர் ஸ்ரீலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். திருமணம் குறித்து விசாரித்து, ஊர்ஜிதம் செய்தனர்.


ஸ்ரீலட்சுமி, ஆல்பர்ட், குழந்தைகள் நல குழு உறுப்பினர் வக்கீல் ஜெயந்திராணி ஆகியோர், நேற்று காலை 10 மணியளவில் குளித்தலை சென்று, மாப்பிள்ளை பெரியப்பா ஜெயபாலிடம் முழு விவரங்களையும் தெரிவித்து, திருமணத்தை நிறுத்தும்படி கூறினர். இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்த சம்மதித்தனர். அதன்பின், மாணவி மணிமொழியை மீட்டு, திருச்சி சேவா சங்கம் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். மணிமொழி பெற்றோரை சமூகநல அலுவலர் ஸ்ரீலட்சுமி எச்சரித்தார். ""என் மகன் கஷ்டப்பட்டு, இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்தான். குடும்ப கஷ்டம் காரணமாகத் தான் பேத்திக்கு திருமணம் ஏற்பாடு செய்தோம். முதலில் சம்மதம் தெரிவித்தாள்; கடைசியில் இப்படி செய்துவிட் டாள்,'' என, மணிமொழி பாட்டி சொர்ணம், அழுதபடியே சென்றார். தனக்கு நடக்க இருந்த கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்திய துணிச்சல் கொண்ட சிறுமி மணிமொழியை அனைவரும் பாராட் டினர்.

Comments

Popular posts from this blog

Sengamalam sirikkuthu Lyrics - Thavanik kanavugal

Valaiyosai Lyrics - Sathya

koondukulla enna Lyrics - Chinna Goundar