Posts

Showing posts from May, 2010

முத்தம்

Image
நான்  ஒவ்வொரு முத்தமும் கொடுக்கும் போதே நான் செத்துபோக வேண்டும் என்று நினைப்பேன் ஒரு சில சத்தம் இல்லாத முத்தத்தின் போது .... எனக்கு சாக வரம் கொடுத்து விட்டாள்... அன்று முதல் .......

நட்பு

Image
    சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் நட்பு.

அவள் இல்லாமல்

Image
போன வழியும் தெரியல வந்த வழியும் புரியல; கண் மூடி திறக்கும் முன் எல்லாமே நடந்துருச்சு; அவ கிட்ட கூட சொல்லல, கை பிடிச்ச நாளாய் என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய் என் கூடவே தான் அவ இருப்பா; பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ புரியலையே! நான் சிரிச்சா அவ சிரிப்பா, நான் அழுதா அவ தொடப்பா, இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம் சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு நான் சாப்புடாம; வெளிய நான் போனாலும் மனசெல்லாம் வழியில வெச்சு காத்து கெடப்பா; நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல; பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட எங்க காதல் கொறையவே இல்ல; மருமகளுங்க வந்தும் கூட அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும் கெழவி ஆகியும் கூட அவ இன்னும் எத்தனை அழகாதான் இருக்குறா; என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய விட்டுட்டு வந்துட்டேனே; அவ இல்லாம இந்த சொர்க்கமும் எனக்கு நரகம் தான்!

கனவு

கனவே கலையாதே... கடைசி சந்திப்பு நிகழட்டும் விடிந்தால் காதலிக்கு திருமணம்!

அம்மாவின் விதி!

  உலகத்து சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்திய உன் முதல் சொந்தம் இன்று முதியோர் இல்லத்தில்!

நிறைவேறாத காதல்

Image
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் அது போல தானே உந்தன் காதல் எனக்கும் நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் - அணைப்பதற்கு ..... நெருப்பாலும் முடியாதம்மா... நினைவுகளை அளிப்பதற்கு ..... உனக்காக காத்திருப்பின் உயிரோடு பார்த்திருப்பான் அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாயி அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தே கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவது போல் என் வாழ்வில் வந்தே போனே ஏமாற்றம் தாங்கலையே பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே ..

பறவையின் ஓசை

Image
ஒவ்வொரு முறையும் வீட்டின் கதவு திறந்து மூடும் போது என்றோ வாழ்ந்த பறவையின் கிரீச்... கிரீச்.... சத்தம் ..    என்றும் அன்புடன் .... ஆர்.வடிவேலு.